பக்கம்:கன்னித் தமிழ்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் என்னும் பண்புருவம்

அன்பு காரணமாகப் பெண்களை அம்மா என்றும், ஆண்களை அப்பா என்றும் அழைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இந்நாட்டில் இருந்து வருகிறது. அப்படியே மாமன், மாமி என்று அழைக்கும் வழக்க மும் உண்டு. தன்னைவிட இளையவனைத் தம்பி என்றும், பெரியவனை அண்ணன் என்றும் அழைப்பார்கள். தங்கச்சி, அக்கா என்று பிற பெண்களை அழைக்கும் வழக்கத்தையும் இங்கே பார்க்கலாம்.

இது இப்படி உறவுப் பெயராக வழங்குபவற்றையே தம்முடைய சொந்தப் பெயராகக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த உறவுப் பெயர் களோடு சில அடை மொழிகளைச் சேர்த்துப் பெயராக வைத்துக் கொள்வார்கள். நல்லண்ணன், பெரியண் ணன், நல்லதம்பி, சின்னத்தம்பி, பெரியதம்பி, நல்ல தங்காள் என்பன போன்ற பெயர்களைத் தம்முடைய சொந்தப் பெயர்களாக வைத்துக் கொண்டவர்களை

நாம் காண்கிருேம். -

இந்த வழக்கம் தமிழ்நாட்டில் மிகப் பழங் காலத் திலும் இருந்து வந்ததென்பதை இலக்கியங்களைக் கொண்டு உணரலாம். சங்ககாலப் பெண் புலவர் களுள் ஒருவர் நச்செள்ளையார் என்பவர். செள்ளை என்பது தங்கை என்னும் பொருளை உடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/235&oldid=613110" இலிருந்து மீள்விக்கப்பட்டது