பக்கம்:கன்னித் தமிழ்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

கன்னித் தமிழ்


அதுவே இக்காலத்தில் தெலுங்கில் செல்லலு என்று வழங்குகிறது. ‘ந’ என்பது சிறப்பைக் குறிக்கும் ஓர் இடைச் சொல். நச்செள்ளையார் என்ற பெயர் நல்ல தங்காள் என்பதைப் போன்றதே. திருமாலின் தேவி யருள் ஒருத்தியாகிய நீளாதேவியை நப்பின்னை என்று தமிழ் நூல்கள் கூறும். பின்னை என்பது தங்கை என்ற பொருளை உடையது. நச்செள்ளை என்பது போன்றதே நப்பின்னை என்ற பெயரும்.

ஒளவை என்ற சொல்லுக்குத் தமக்கை என்று பொருள். அதுவே தவ்வை என்றும் வரும். உங்கள் தமக்கை என்ற அர்த்தத்தில் துவ்வை என்று வரும்; தும் ஒளவை என்னும் தொடரே அவ்வாறு ஆயிற்று. தம் ஒளவை என்பது தவ்வை என்று வந்தது. பிரா யத்தில் மூத்தவர்களை அக்காள் என்று வழங்கும் வழக்கம் உண்டு. தமிழுலகம் அறிந்த மூதாட்டியா ராகிய ஒளவைக்கு இயற் பெயர் இன்னதென்று தெரியவில்லை. ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்து விளங்கிய அம் மூதாட்டியாரின் சொந்தப் பெயரை மக்கள் வழங்கவில்லை. பெரியவர்களின் சொந்தப் பெயரை வெளிப்படையாகச் சொல்வது மரியாதை அன்று என்று இந்த நாட்டினர் நினைப்பார்கள். பல பெரியோர்களுக்குச் சொந்தப் பெயர் இன்னதென்று இப்போது தெரிவதில்லை. அதற்குக் காரணம் மேலே சொன்னபடி, மக்களுக்கு அவர்களிடம் இருந்த பெரு மதிப்பேயாகும். கம்பர் என்பது சாதிப் பெயர். கவிச் சக்கரவர்த்தியாகிய அவருடைய சொந்தப் பெயர் இன்னதென்று தெரியவில்லை. སྨན་ཐུན་ར་ལ་

ஒளவையார் தமிழ்நாட்டின் பரப்பெல்லாம் சென்று பரவிய புகழை உடையவர். அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/236&oldid=1286069" இலிருந்து மீள்விக்கப்பட்டது