பக்கம்:கன்னித் தமிழ்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் என்னும் பண்புருவம் 231

‘அடடா ! இந்தப் படைக்கலங்கள்தாம் எவ் வளவு அ ழ கா. க இருக்கின்றன மயிற்பீலியும் மாலையும் அணிந்திருக்கின்றன. நெய்பூசிப் பாதுகாப் பாக வைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனல் அதிகமா னுடைய ஆயுதங்களோ பகைவர்களைக் குத்தி முனை மழுங்கிவிட்டன. அவை இப்போது கொல்லன் பட்டறையிலே கிடக்கின்றன” என்று பாடினர்.

இவ்வே, பிலி அணிந்து மாலே சூட்டிக் கண் திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து கடியுடை வியனக ரவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து கொல் துறைக் குற்றில மாதோ, என்றும் உண்டாயிற் பதங்கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைத்துதி வேலே.” ஒளவையார் இவ்வாறு கிண்டலாகப் பேசும் ஆற்றல் உடையவர் என்பதைப் பிற்காலத்தவரும் மறக்கவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த ஒளவையாரும் இவ்வாறு குறிப்பாகப் பிறர் அறியாமையைக் காட்டி யிருக்கிறார்.

எப்போதும் வருவாருக்கு விருந்து அளிக்கும்

இயல்புடைய மருத்தன் என்பவனைக் கண்டு, அவன்

இவ் - இவையே. கண் - மூட்டுவாய். நோன் காழ் - வலிய கோல். கடி - காவல். நகர் - அரண்மனை. அவ்வே - அவையே. கோடுதுதி - வளைந்த நுனி, கொல் துறைக் குற்றில - கொல்லனுடைய களத்தில் பட்டறை யிலே இருக்கின்றன. பதம் - உணவு, ஒக்கல் - உறவினன். வை . கூாமையான. - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/239&oldid=613124" இலிருந்து மீள்விக்கப்பட்டது