பக்கம்:கன்னித் தமிழ்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

கன்னித் தமிழ்


வீட்டில் உணவு கொண்டுவிட்டுத் திருத்தங்கி என் பவன் வீட்டுக்கு வந்தார் ஒளவையார். பிறருக்கு இம்மியும் ஈயாப் பெருந்தகை அவன். அவன் வீட்டு வாழை மரம் தளதள வென்றிருந்தது. ‘என்னைப் பாடவேண்டும்” என்று கேட்டான் திருத்தங்கி, தமிழ் மூதாட்டியார் பாட ஆரம்பித்தார்.

திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்: மருத்தன் திருக்குடந்தை வாழை-குருத்தும் இல்யும்இல், பூவும்இல், காயும்இல், என்றும் உலகில் வருவிருந்தோர் உண்டு.

என்பது அவர் பாட்டு.

மக்களை ஒன்றியிருந்து வாழும்படிசெய்யும் தொண்டை ஒளவையார் செய்து வந்தார். ஒற்றுமை யாக வாழ்வாருக்கு ஊக்கம் ஊட்டினர்.

தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டியர்களாகிய முடிமன்னர் மூவர் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் மூவரும் ஒன்று சேர்வதே இல்லை. யாரேனும் ஒருவரை எதிர்க்கவேண்டுமானல் மற்ற இருவரும் ஒன்று சேர்வார்கள். மற்றச் சமயங்களில் அவர்கள் ஒருங்கே கூடியிருப்பதைக் காணமுடியாது. ஒரு சமயம் இம் மூவரும் ஒன்று கூடினர்கள். அந்த அருமையான காட்சியை ஒளவையார் கண்டார். சேரமான் மாரிவெண்கோ என்பவனும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கே இருந்தார்கள். ஒளவையார் அந்த ஒற்றுமையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/240&oldid=1286071" இலிருந்து மீள்விக்கப்பட்டது