பக்கம்:கன்னித் தமிழ்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் என்னும் பண்புருவம் 233

கண்டு மகிழ்ந்து, “இப்படியே நீங்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும்’ என்று வாழ்த்தினர். அந்தணர்கள் \

வளர்க்கும் மூன்று அக்கினிகளைப் போல எல்லோரும் மதிக்கும்படி நன்மை புரிந்து வாழ்வீராக!’ என்று பாடினர்.

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்திப் காண்டக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்! யான்அறி அளவையோ இதுவே, வானத்து வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென - இயங்கு மாமழை உறையினும் உயர்ந்துமேந் தோன்றிப் பெறுகதும் நாளே!

‘இறைவனைத் தியானித்தலாகிய ஒன்றைச் செய்து புலன் அடக்கம் பெற்ற அந்தணர் ஒம்பும் மூன்று அக்கினிகளைப் போல, காண்பதற்கு அழகாக ஒன்றுபட்டு இருந்த, வெற்றிக் குடையையும் கொடியை உடைய தேரையும் பெற்ற வேந்தர்களே! நான் அறிந்த அளவை வைத்துச் சொல்கிறேன். அது இதுதான். வானத்திலே விட்டு விளங்கித் தோன்றும் நட்சத்திரங்களைக் காட்டிலும், இம்மென்று மொழியும் பெரிய மழைத்துளியைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து உங்கள் வாழ்நாட்கள் பலவாகி விளங்குவன வாகுக!’ என்பது இதன் பொருள்.

பிற்காலத்தில் வாழ்ந்த ஒளவையாரும் முடியுடை மூவேந்தரையும் ஒருங்கே கண்ட காட்சி ஒன்று உண்டு. அங்கே ஒளவையாரே அவர்களை அழைத்து ஒன்றுபடச் செய்தார். அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தெய்வீகன் என்னும் சிற்றரச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/241&oldid=613133" இலிருந்து மீள்விக்கப்பட்டது