பக்கம்:கன்னித் தமிழ்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

கன்னித் தமிழ்


னுக்கு மணம்புரிவித்தார். அந்தக் கல்யாணத்துக்குச் சேர சோழ பாண்டியர்களை வருவித்து உபசாரம் செய்தார்.

திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும் மங்கைக் கறுகிட் வந்து நின்

முர்மணப் பந்தலிலே. என்று ஒளவையார் பாடியிருக்கிறார்.

இன்னும், ஒளவையார் என்ற அளவிலே உள் ளத்தே தோன்றும் பண்புகள் பலவாகும். பெயராலும் உருவத்தாலும் மக்கள் ஆவதில்லை. பண்பினுல்தான் மக்கள் மக்களாகிறார்கள். பண்புடைய பலரினும் மிக மிகச் சிறந்த பண்புகளைத் தமக்கே உரியனவாகப் பெற்ற பெரியோர் வானத்தில் தோன்றும். சுடர் களைப் போல விளங்குகின்றனர். ஒளவையாரும் அத்தகைய சுடர்களில் ஒன்று. காலந்தோறும் ஒளவை யார் என்ற பண்புருவத்தைத் தமிழ் மக்கள் நினை ஆட்டிக் கொண்டு வருகின்றனர். இலக்கியம், உபதேசம், யோகம், பக்தி நெறி, ஒழுக்கம், பெரு மதிப்பு ஆகியவற்றேடு இணைந்து நிற்கும் திருவுருவம்

ஒளவையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/242&oldid=1286072" இலிருந்து மீள்விக்கப்பட்டது