பக்கம்:கன்னித் தமிழ்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்க ள் பாவ ம்!

சிவஞான முனிவர் சிவஞான போதத்துக்குப் பேருரை எழுதி மாபாடிய கர்த்தர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். நன்னூலுக்குப் புத்தம் புத்துரை வகுத்தவர். சில கண்டன நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் படித்தவர் களுக்குச் சிவஞான முனிவருடைய அறிவும் மிடுக்கு. நடையும் புலப்படும். ஆனல் அவர் கவியுள்ளமும் படைத்தவர். இலக்கியப் படைப்புக்கு ஏற்ற உணர்ச்சிச் செல்வம் அவரிடத்தில் நிறைந்திருந்தது. காஞ்சிப் புராணத்தைப் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.

அவர் திருவாவடுதுறை மடாலயத்துத் தம்பிரான் திருக் கூட்டத்தில் ஒருவர். இளமையிலேயே அந்த ஆதீனத்தைச் சார்ந்து துறவு பூண்டவர். ஆதீனத் தில் உள்ள தம்பிரான்களில் சிலருக்குச் சில வேலை களை அளித்திருப்பார்கள். பல காலம் மடத்துப் பழக்க. வழக்கங்களைத் தெரிந்து கொண்டவர்களுக்குக் காறு பாறு, ஒடுக்கம், பூசை முதலிய பதவிகள் கிடைக்கும்.

மடத்தில் பண்டார சந்நிதிகள் உணவு கொள் ளும் போது திருக் கூட்டத்துத் தம்பிரான்களும் வெள்ளை வேட்டிக்காரர்களாகிய சைவர்களும் அந்தப்

பந்தியில் அமர்ந்து உண்ணும் பேறு பெறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/243&oldid=613139" இலிருந்து மீள்விக்கப்பட்டது