பக்கம்:கன்னித் தமிழ்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

கன்னித் தமிழ்


ஒரே பந்தியில் அமர்ந்தாலும் உணவு வகையிலும் உபசார வகையிலும் தம்பிரான்களுக்குள் வேறுபாடு இருக்கும். முதலில் அமர்ந்திருக்கும் பழைய தம்பி ரான்களுக்கு நல்ல உணவுகள் கிடைக்கும். புதிய குட்டித் தம்பிரான்களுக்கு அதைவிடத் தாழ்ந்த உணவே கிடைக்கும். புதிய தம்பிரான்கள் நாச் சுவையை வளர்க்கவொட்டாமல் செய்யவேண்டும் என்ற நோக்கம், இதற்குக் காரணமாக இருக் கலாம்.

சிவஞான முனிவர் புதிய தம்பிரான் வரிசையில் இருந்தார். தமிழ் அறிந்த உள்ளம் ஆதலின் வீண் பொழுது போக்காமல் தம்மோடு பழகும் வேறு சில குட்டித் தம்பிரான்களுக்குத் தமிழ் நூல்களைக் கற்பித் தார். யாப்பிலக்கணங்கூட அவர்களுக்குச் சொல்லித். தந்தார். .

ஒருநாள் பந்தி நடந்துகொண்டிருந்தது. பந்தி யின் கடைசியில் சிவஞான முனிவரும் அவருடைய நண்பர்களாகிய தம்பிரான்களும் அமர்ந்திருந்தனர். இலை போட்டு உணவு படைத்தார்கள். சோற்றில் கல் லும் மண்ணும் இருந்தன. குழிபோட்ட சம்பா நெல் லாக இருந்தாலும் நன்றாக வடிக்காமையால் சோறு பதம் கெட்டிருந்தது. அதைப் பார்த்தாலே அரு வருப்பாக இருந்தது. பந்தியில் யாவரும் உண்ணத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் குட்டித் தம்பிரான் களோ சோற்றைக் கையில் எடுக்க மனம் வராமல் இருந்தனர்.

அப்போது அவர்களில் ஒரு தம் பி ரா ன் என்னவோ சொல்லத் தொடங்கினர். தங்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/244&oldid=1286073" இலிருந்து மீள்விக்கப்பட்டது