பக்கம்:கன்னித் தமிழ்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் பாவம் ! 337°

குள்ளே பேசுபவரைப் போலவே மெல்லச் சொன்னர். அவர் பேசவில்லை; அந்த நிலையைப் பற்றிச் செய்யுள் ஒன்றை யோசித்துச் சொல்ல ஆரம்பித்தார். முழுச் செய்யுள் கூட அன்று; ஒரு செய்யுளின் முதலடியை மாத்திரம் சொன்னர். அட, அரிசி எவ்வளவு நல்ல அரிசி குழிபோட்ட சம்பா அரிசி! இதைச் சமைக்கத் தெரியாமல் எவனே ஒருவன் குட்டிச் சுவராக்கி விட் டானே! இதைச் சாப்பிடும் தலைவிதி நமக்கு வந்திருக் கிறதே! என்று சிந்தித்த அவர், அதன் விளைவாக, அந்தச் செய்யுள் அடியைச் சொன்னர்.

கொங்கன் வந்து பொங்கிளுன் குழியரிசிச் சோற்றில்ை என்று பாடினர். மற்றத் தம்பிரான்களும் அவரைப் போலவே சோற்றைக் கண்டு வயிறு எரிய உட் கார்ந்தவர்கள். ஆகவே அவர்களுக்கும் தங்கள் வெறுப்பைப் பாட்டாக்கிச் சொல்லவேண்டு மென்ற ஆவல் எழுந்தது. இரண்டாவது தம்பிரான் மேலே சொன்ன பாட்டின் இரண்டாவது அடியைச் சொன்னர். .

சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினர் . என்று அவர் பாடினர். இதையும் தலையெழுத்தே என்று இங்குள்ள தம்பிரான்கள் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். நாம் சும்மா உட்கார்ந்து என்ன பயன்?” என்று நினைத்து அவர் அப்படிப் பாடினர். பாட்டு இப்போது இரண்டடி நிரம்பிய பாதிப் பாட்டாக

கொங்கன்வந்து பொங்கிளுன் குழியரிசிச் சோற்றினல்

சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினர்.

. மூன்றாவது தம்பிரான் பார்த்தார். பாட்டின் இரண்டடிகளையும் கேட்டார். நாம் எப்படியும் இதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/245&oldid=613145" இலிருந்து மீள்விக்கப்பட்டது