பக்கம்:கன்னித் தமிழ்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

கன்னித் தமிழ்


சாப்பிட்டுத்தான் தீரவேண்டும். எல்லோரும் சாப்பிடும் போது நாம் நம் கண்ணை அங்கும் இங்கும் ஒட்டிக் கொண்டிருந்தால் ஒரு லாபமும் இல்லை. அமுதிலே கண் வைக்க வேண்டும் என்ற கருத்து அவருக்கு எழுந்தது. மூன்றாவது அடியைப் பாடினர் :

அங்கும்.இங்கும் பார்க்கிறிர் அமுதினிற்கண் இல்லையே!

என்று அவர் அந்த அடியைச் சொன்னர் பாட்டை முடிப்பதற்காக மூன்று பேரும் முயன்றுகொண்டிருந் தார்கள். அடுத்த அடி எளிதில் வரவில்லை. எதுகை யைப் பார்த்தார்கள்; மோனையைப் பார்த்தார்கள்; சொல்லைத் தேடினர்கள்; வரவில்லை. நல்ல சோருகக் கிடைக்கவில்லையே என்ற தவிப்பைக் காட்டிலும் பாட்டை நிரப்ப நான்காவது அடி கிடைக்கவில்லையே என்ற தவிப்பு அவர்களுக்கு அதிகமாக இருந்தது. அவர்களுடன் உட்கார்ந்திருந்த சிவஞான முனிவர் அவர்கள் சங்கடத்தைப் போக்கினர்.

எங்கள் பாவம் எங்கள் பாவம் எங்கள் பாவம் ஈசனே!

என்று கூறிப் பாட்டை நிறைவேற்றினர். இப் பொழுது பாட்டு நாலடிகளையும் உடைய முழுப் பாட்டாகி விட்டது. - . . .

கொங்கன்வந்து பொங்கிளுன் குழியரிசிச் சோற்றில்ை; சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கினர்; - அங்கும்.இங்கும் பார்க்கிறீர் அமுதினிற்கண் இல்லையே: எங்கள்.பாவம் எங்கள் பாவம் எங்கள் பாவம் ஈசனே! இந்தப் பாட்டின் நான்கு அடிகளும் ஒரேமாதிரி இருக்கவில்லை. நாலாவது அடியைக் கேட்கும்போது அது மற்ற மூன்று அடிகளைவிட மிகவும் நன்றாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/246&oldid=1286074" இலிருந்து மீள்விக்கப்பட்டது