பக்கம்:கன்னித் தமிழ்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் பாவம் ! 239

இருப்பதாகத் தோன்றுகிறது. அதில் ஏதோ ஒரு தனிச் சிறப்பு இருப்பதாகத் தெரிகிறது. முதல் மூன்று அடிகளையும் கேட்கும்போது அந்தப் பாட்டு எழுந்த நிலைக்களம் நன்றாகத் தெரிகிறது. அவற்றை நினைக்க அவை உதவுகின்றன. நான்காவது அடி யைக் கேட்கும்போது ‘ஹா’ என்று நம்மை அறியா மலே நாம் சொல்கிருேம். அந்த அடியில் ஏதோ ஒன்று, நம் உள்ளத்தைத் தொடுகிறது. அது மற்ற மூன்று அடிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. அது என்ன?

பாட்டில் உள்ள சொல்லும், சொற்களால் குறிக் கப்பெறும் பொருளும் எப்படி அமைந்திருக்கின்றன? முதல் மூன்று அடிகளிலும் அதிகச் செய்திகள் இருக் கின்றன. கொங்கன் சோற்றைப் பொங்கியதையும், சங்கமங்கள் கூடிச் சாப்பிடுவதையும், பாட்டுப் பாடிய தம்பிரான்கள் அங்கும் இங்கும் பார்த்து விழிப்பதையும் அந்த அடிகள் சொல்கின்றன. நான்காவது அடியில் அந்த விவரம் ஒன்றும் இல்லை. எங்கள் பாவம் என்ற தொடரே மூன்று முறை வருகிறது. சுவை தெரியா தவர்கள், “மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொன் னதில் என்ன சுவை இருக்கிறது? கூறியது கூறல் என்ற குற்றந்தான் இருக்கிறது” என்றுகூடச் சொல் லக்கூடும். குற்றமா? அந்த அடியில் குற்றம் இருக் கிறது என்பவன் சுவையறியாதவகை இருக்க வேண்டும் என்று நாம் சொல்லுவோம். ஆந்த மனித னுக்கு என்ன பட்டம் சூட்டலாம் என்று எண்ணி முட்டாள், மடையன் என்பன போன்ற வார்த்தை களைத் தேடத் தொடங்கி விடுவோம். அது கிடக் கட்டும். நான்காவது அடியில்தான் ஏதோ ஜீவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/247&oldid=613151" இலிருந்து மீள்விக்கப்பட்டது