பக்கம்:கன்னித் தமிழ்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

கன்னித் தமிழ்

இருக்கிறது போலப் படுகிறதே; அதைச் சற்று

விண்டு பார்க்கலாம்.

பாட்டு வந்ததற்குக் காரணம் தம்பிரான்கள் அந்தச் சோற்றைக் கண்டு பட்ட வேதனைதான். அந்த வேதனையை, வயிற்றெரிச்சலை, வசனமாகச் சொல்லாமல் பாட்டாகச் சொல்லவேண்டும் என்று ஆரம்பித்தார்கள். மூன்று பேரும் பாடிய அடிகளில் வயிற்றெரிச்சலுக்குக் காரணமான பொருள்கள் வந்தன. ஆல்ை வயிற்றெரிச்சலாகிய உணர்ச்சி வெளிவரவில்லை. எதுகை, மோனை, சொற்கள் எல்லாம் இருந்தன. ஆனல் இவ்வளவையும் கொண்டு எதைச் சொல்ல வந்தார்களோ அந்த உணர்ச்சியை நான்காவது அடி தான் சொல்கிறது. ‘அட தலைவி தியே!’ என்று தலையில் அடித்துக் கொள்வதுபோல அந்த அடி நிற்கிறது. எங்கள் பாவம் எங்கள் பாவம் எங்கள் பாவம் ஈசனே!’ என்று மூன்று முறை சொல்லிவிட்டு ஈசனைக் கூப்பிட்டதில் உணர்ச்சி விஞ்சி நிற்கிறது. முதல் மூன்று அடிகளில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குரிய பொருள் உண்டு. அத்தனையும் செய்திகள். நான்காவது அடி யில் உள்ள சொற்களுக்கு பொருள் உண்டு; ஆனல் அந்தப் பொருளோடே நிற்கவில்லை; அதற்கு மேல் உணர்ச்சியை எட்டி நிற்கிறது அடி. அப்போது சொற்களின் பொருளைக்கூட நாம் இழந்துவிடுகிருேம். மணியை அடிக்கிறபோது மணியும், அடிக்கும் நாக்கும் வேலை செய்வதை ஒழிந்து நின்றுவிட்டாலும், அவற். றைக் கடந்து மணியின் ஒலி நீண்டு நிற்பதுபோல, சொல் பொருளைக் காட்ட, பொருள் பாவத்தைக் காட்ட, நாம் சொல்லையும் அதற்கு உள்ள நேரான பொருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/248&oldid=1286075" இலிருந்து மீள்விக்கப்பட்டது