பக்கம்:கன்னித் தமிழ்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் பாவம் ! 341

யும் மறந்து உணர்ச்சியிலே ஒன்றுபடுகிருேம். என்ன பாவம்’ என்ற தொடர், நாம் இந்தத் துன்பத்தை அடைய என்ன பாவம் செய்தோம்? என்ற பொரு ளைக் குறிக்கிறது. முன்பு என்ன பாவம் செய்து இந்தத் துன்ப விளைவு உண்டாயிற்று?’ என்ற ஆராய்ச்சியிலே இறங்கினரா, சிவஞான முனிவர்? இல்லை, இல்லை. அப்படி இருந்தால் அந்தத் தொடரை அவ்வளவு வேகமாக மூன்று முறை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எங்கள் பாவம்’ என்ற தொடர் உணர்ச்சியை வெளியிடும் வாய்பாடாக நிற்கிறது

அவ்வளவுதான். -

பாவம்! அந்தக் குழந்தையைக் கவனிப்பாரே இல்லை” என்று சொல்லுகிருேம் திக்கற்ற குழந்தை யைக் கண்டபோது நம் உள்ளத்தே சுரக்கும் இரக்கத் துக்கு அடையாளமாக அந்தப் பாவம்’ என்ற சொல் வருகிறது. அதற்குரிய பொருளை அது சுட்டுவதாக இருந்தால், ‘பாவம் செய்தவர் யார்?’ என்ற விசாரணை எழும். குழந்தை போன ஜன்மத்தில் பாவம் செய் தது; அதல்ை இந்த ஜன்மத்தில் திண்டாடுகிறது. என்று பொருள் விரிப்பதாக இருந்தால், அங்கே இரக்கம் தோன்ற இடமே இல்லை. இரக்கப்படக் கூடாது என்பதற்குரிய காரணமாக, இழிப்புக்குரிய காரணமாக, அல்லவா அது ஆகிவிடும்? ஆகவே, அங் குள்ள பாவம் என்ற சொல் தனக்குரிய பொருளைக் குறித்து நிற்காமல், அதையும் கடந்து இரக்க உணர்ச் சியைக் குறிப்பிடும் அடையாளமாக நிற்கிறது. . அந்தக் குழந்தையைக் கவனிப்பரே,இல்ல என்றால் ஒரு செய்தியை வெளியிடும் வாக்கியம் என்ற அளவில் நிற்கிறது. பாவம்! அந்தக் குழந்தையைக் கவனிப்

16.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/249&oldid=613159" இலிருந்து மீள்விக்கப்பட்டது