பக்கம்:கன்னித் தமிழ்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

கன்னித் தமிழ்

பாரே இல்லை என்றால்தான் இதைச் சொல்பவன் செய்தியைச் சொல்லும் அளவோடு நிற்பவன் அல்ல, உள்ளம் இரங்குபவன் என்று தெரியவருகிறது. அவன் உள்ளம் இரங்குவதை, நாம் உணரும்படி செய்வது பாவம்’ என்ற ஒரு சொல்!

எத்தனை சமயங்களில் நாம் நினைந்தபடி ஒன்று நடக்காவிட்டாலும் நம் மனத்துக்குப் பொருந்தாத ஒன்றைக் கண்டாலும், ஏமாற்றம் உண்டானலும் அட கடவுளே! என்று சொல்லுகிருேம்! அப்படிச் சொல்வதும் மனத்தில் உள்ள உணர்ச்சியைக் காட்ட எழுவதே. சிவஞான முனிவர் இந்த இரண்டு உணர்ச்சி அடையாளங்களையும் சேர்த்துப் பாட்டோடு இணைத்துவிட்டார். உணர்ச்சியின் வேகத்தைக் காட்ட மூன்று முறை எங்கள் பாவம்’ என்பதைச் சொல்லிக் கடைசியில் முத்தாய்ப்பு வைப்பது போல ஈசனே !! என்று முடித்தார். - . . . .

இந்தப் பாட்டைப் பாடுவதற்குக் காரணம், அவர்களுக்குக் கிடைத்த உணவின்மேல் உண்டான அருவருப்பு உணர்ச்சி. அந்த உணர்ச்சி நான்கு தம்பிரான்களுக்கும் இருந்தன. ஆனல் அதை வெளியிட மூன்று பேரால் முடியவில்லை. எதற்காகப் பாட்டைப் பாட வந்தார்களோ அது நிறைவேற. வில்லை. சிவஞான முனிவர், அவர்களால முடியாத அதைச் செய்துவிட்டார். அவருக்குக் கிடைத்தது ஒரே அடிதான். ஆனல் அந்த அடியில் உண்ர்ச்சி பொங்கி வழியப் பாடிவிட்டார்.

முன்னய மூன்றும் சொல்லையும் பொருளயும் த்ெரிவிக்க்த்ாலாவது அடி உணர்ச்சியை நரமும் ஆன

円呼6M

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/250&oldid=1286076" இலிருந்து மீள்விக்கப்பட்டது