பக்கம்:கன்னித் தமிழ்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் பாவம் ! . 243

ரும்படி செய்கிறது. அந்த உணர்ச்சி ஏற்படக் காரண மாக இருந்த பொருள்கள் இல்லாத இடத்திலும், நமக்கு அதன் விளைவாகிய உணர்ச்சி புலனுகிறது. அதல்ை நாமும் அவர் பெற்ற உணர்ச்சியை உணர் கிருேம். அதனுல்தான் அந்த அடி அதிசயமாகச் சுவை தருகிறது. உண்மையில் அந்த அடிதான் கவியாக நிற்கிறது. . r கொங்கன்வந்து பொங்கின்ை குழியரிசிச் சோற்றில்ை

சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கிஞர் அங்கும்.இங்கும் பார்க்கிறீர் அமுதினிற்கண் இல்லையே எங்கள் பாவம் எங்கள்.பாவம் எங்கள்.பாவம் ஈசனே

என்ற முழுப்பாட்டையும் சொல்லும்போது மணி யடித்த பிறகு அதன் ஒலி நெடு நேரம் நம் காதில் ஒலிப்பது போலப் பாட்டின் ஜீவனுகிய உணர்ச்சி பாட்டைச் சொல்லி முடித்த பிறகும் உள்ளத்திலே நிற்கிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/251&oldid=613170" இலிருந்து மீள்விக்கப்பட்டது