பக்கம்:கன்னித் தமிழ்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவர்

ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே ஒருவரைச் சிநேகம் பிடித்தேன். யாரோ கிராமவாசி. ஆலுைம் நாகரிகம் தெரிந்தவராக இருந் தார். கலகலப்பாகப் பேசினர். அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவர் ஒரு வேளாளர் என்று அறிந் தேன். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த ஊரில் அவ ருக்கு நாலு ஏகரா நன்செய் இருக்கிறதாம்.

பேசிக்கொண்டே வந்தேன். அவரும் ரசிமாகப் பேசினர். யாரோ ஒருவர் தம் பையன் சரியாகப் படிக் காமையால் பரீட்சையில் தோல்வியுற்ற கதையைச் சொன்னர். ‘காலேஜில் அவனுக்கு இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை’ என்று சொல்லி முடித் தார். அதைக் கேட்ட என் நண்பராகிய அந்த விவ சாயி, உழவுக் காலத்தில் ஊரைவிட்டே போய்விட் டால் அறுப்புக் காலத்தில் ஆள் தேடவேண்டாம்” என்று ஒரு பழமொழியை வீசினர்.

‘உங்கள் தொழிலுக்கு ஏற்ற பழமொழியைச் சொல்கிறீர்கள்” என்றேன்.

ஆமாம்; என் தொழில் என்ன? இந்தியாவுக்கே அதுதானே தொழில்? அதை விட்டு விட்டுத்தான் இப்போது ஆலாய்ப் பறக்கிறார்கள். நிலம் படைத் தவர் எல்லாம் பட்டணத்திலே போய் உட்கார்ந்து கொண்டால் நிலத்தில் என்ன விளையும்? குத்தகைக்கு விட்டு விட்டுக் குத்தகைக்காரன் தருவதை வாங்கிப் செலவு செய்தால் என்ன லாபம்? நிலந்தான் உருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/252&oldid=613173" இலிருந்து மீள்விக்கப்பட்டது