பக்கம்:கன்னித் தமிழ்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவர் மொழி 345

படுமா? உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” உத்தியோகம் பண்ணிப் பண்ணி என்ன கண்டார்கள்? உழவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார்” என்ற வசனத்தைக் கேட்டதில்லையா?”

‘உத்தியோகத்தில் எத்தனை பேர் உயர்ந்த, நிலைக்கு வந்திருக்கிறார்கள்?” -

“அங்கொருவர் இங்கொருவராக இருந்தால் போதுமா? ஆயிரம் சொல்லுங்கள். தன் நிலத்தைத் தானே உழுது பயிர் செய்கிறவனுக்குச் சமானம் யாரு மில்லை. உழவு அற உழுதவன் ஊரில் பெரியவன்.”

நான் நடுவே குறுக்கிட்டேன். “உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுகோலும் மிஞ்சாது என்று சொல்லுகிறார்களே! அப்படி இருக்க, உழவில்ை எப்படி முன்னுக்கு வருகிறது?” .

“அதுவா? அந்தப் பழமொழிக்குத் தப்பான அர்த்தம் செய்துகொண்டு பேசுகிறர்கள் ஜனங்கள்; வியாபாரிதான் ஒவ்வொன்றுக்கும் கணக்குப் பார்த்துச் செட்டாக வியாபாரம் பண்ணவேண்டும். வேளாளன் செட்டாக இருந்தால் ஒன்றும் பயன் இல்லை. அவன் கணக்குப் பார்க்க ஆரம்பித்துக் கூலிக்கு அஞ்சி உழவைக் குறைத்தாலும், பணத்துக்கு அஞ்சி உரத் தைக் குறைத்தாலும் விளைவு மோசமாகிவிடும். அதனுல்தான் ‘செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை’ என்று சொல்லுவார்கள்.” -

கும்பகோணத்தைத் தாண்டி விட்டோம். அங்கே வாழைத் தோட்டங்கள் இருந்தன. அவற்றில் இலையை அறுத்திருந்தார்கள். அதைப் பார்த்த என் நண்பர், இலை தின்னி காய் அறியான்’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/253&oldid=613177" இலிருந்து மீள்விக்கப்பட்டது