பக்கம்:கன்னித் தமிழ்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

கன்னித் தமிழ்


தினமும் சாப்பிடுவதே கஷ்டமாக இருக்கும் ஏழைக்குக் குப்பையில் முளைத்த கீரைதான் கறி. அவன் இலையைத் தின்னுகிறவன். அவனுக்குக் காய் வாங்கப் பணம் ஏது?-இதுதான் அந்தப் பழமொழியின் பொருள் என்று நினைத்தேன். ஆனல் என் நண்பர் அதை இப்போது கூறுவதற்குக் காரணம் என்ன?

‘வாழைக்கும் அந்தப் பழமொழிக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டேன்.

‘வாழையை வைத்தால் இலை நறுக்கக்கூடாது. இலையை நறுக்கிவிட்டால் காய் சிறுத்துவிடும். இலையை நறுக்கிப் போட்டுச் சோறு தின்றால் காய் உதவாமற் போய்விடும்’ என்று அவர் விளக்கினர்.

“வீட்டுக் கொல்லையிலே வாழை போட்டால் இலக்குத்தானே உதவுகிறது?”

‘வாழையடி வாழையாக வரவேணுமே ஒழிய வாழையோடு வாழையாக வளரவிட்டால் காய் நன்றாய் இருக்காது. எட்டு அடி வாழையும் பத்து அடி பனையும் என்று சொல்லுவார்களே; கேட்டதில்லையா? இடம் விட்டு நட்டால்தான் நல்ல வளர்ச்சி ஏற்படும்.’

அவர் எங்கே வாழையைப் பற்றி ஒரு பிரசங்கமே செய்துவிடப் போகிருரோ என்று பயந்து போய் என் பேச்சை மாற்றத் தொடங்கினேன். -

“உங்கள் ஊரில் கமுகந் தோட்டம் இல்லையா?” “அதெல்லாம் மலையாளத்தில்தான். அதிலும் கமுகை வ்ைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம். கை காய்த்தால்தான் கமுகு காய்க்கும்’ என்றார். -

“கை காய்ப்பதாவது!” ஆச்சரியத்துடன் கேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/254&oldid=1286077" இலிருந்து மீள்விக்கப்பட்டது