பக்கம்:கன்னித் தமிழ்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவர் மொழி 24?”

‘அதற்குத் தண்ணிர் விட்டுத் தண்ணீர் விட்டுக் கையில் காய்ப்பு ஏற்படவேண்டும். அவ்வளவு பாடு பட்டால்தான் கமுகைக் காப்பாற்றலாம்.’

“அவர் தம் பிள்ளையைப் பற்றிச் சொன்னர். அதற்கு நீங்கள் ஒரு பழமொழி சொன்னீர்கள். அதி’ லிருந்து எத்தனையோ பழமொழிகளைக் கொட்டி விட்டீர்கள்’ என்று நான் சொன்னேன்.

‘பிள்ளைகளை வளர்க்கிறது எவ்வளவு அருமை: விளையும் பயிர் முளையிலே தெரியும். இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லாம் பிஞ்சிலே பழுக்கிற பேர்வழிகள். விழலுக்கு இறைத்த நீர்போலத் தங்கள் இளமைக் க்ாலத்தை வீண் ஆக்குகிறர்கள்.”

பெரியவர்கள் பிள்ளைகளைக் கவனித்து வந்தர்ல் அவர்கள் சரியாக இருப்பார்கள்.’

வேலியே பயிரை மேய்கிறது போல வயசானவர் களுக்கே ஒன்றும் தெரிகிறதில்லை. நல்ல முறையில் அவர்கள் வாழ்ந்தால் பிள்ளைகளும் நன்றாக இருப் பார்கள். பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் என்பது பொய்யாகவா போகும்? ஆச்சா விதைத்தால் ஆமணக்கு முளைக்குமா? தாம் மனம் போனபடி நடந்தால் அவர் பிள்ளைகள் அதற்கு மேல் நடக் கிறார்கள். பாவி பாவம் பதராய் விளைந்தது’ என்று. சொல்கிறது. மெய்யான பேச்சு.” § அவர் விவசாயத்திலே ஊறினவர். அவர் பேச்சி லெல்லாம் விவசாயப் பழமொழிகள் துள்ளின.

‘விவசாயத்தைப் பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய நாடு விவசாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/255&oldid=613183" இலிருந்து மீள்விக்கப்பட்டது