பக்கம்:கன்னித் தமிழ்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

கன்னித் தமிழ்


நாடு. ஆனல் எல்லோரும் விவசாயம் செய்ய முடியுமா? நிலம் வேண்டாமா?’ என்று நான் கேட்டேன்.

‘நிலமா? காந்தி சொன்னரே, ஒரு சின்ன டப்பாவில் தக்காளிச் செடியையாவது பயிரிடுங்கள் என்று சொன்னரே, அது நினைவு இருக்கிறதா? அவரவர்கள் வீட்டுக் கொல்லையிலே ஏதாவது செடி நடலாம். அவரைக்கு ஒரு செடி, ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை’ என்று சொல்வதைக் கேட்டதில்லையா? குழியிற் பயிரைக் கூரைமேல் ஏறவிட்டாற் போயிற்று; ‘ஆடிமாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய் காய்க்கும். இப்படித்தான் நம் முன்னேர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய அநுபவமே இன்று பழமொழிகளாக வழங்குகிறது.”

நான் இறங்குகிற இடம் வந்துவிட்டது.அதனல் அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன். .

{& *3

வல மரத்துக்கு நிழல் இல்லை; வெள்ளாள ருக்கு உறவு இல்லை’ என்று சொல்லுவார்கள். நான் அப்படி இல்லை. என்னை நினைவு வைத்துக் கொள் ளுங்கள். எங்கள் ஊர்ப்பக்கம் எப்போதாவது செளகரி யப்பட்டால் வாருங்கள்” என்று அவர் விடையளித்த போதும் ஒரு பழமொழியைச் சொன்னர். w

அவர் இந்தக் குறுகிய காலத்துக்குள்ளே சொன் னவையே இத்தனை என்றால் இன்னும் எத்தனை பழமொழிகள் அவரிடம் இருக்கின்றனவோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/256&oldid=1286078" இலிருந்து மீள்விக்கப்பட்டது