பக்கம்:கன்னித் தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைச் சங்கம் 39.

முதுநாரை,முதுகுருகு, களரியாவிரை என்ற பெயர்களையுடைய பழைய பாடல்களைப் பாடினர்கள். இந்தப் பெயர் களில் பரிபாடல் என்ற ஒன்றுதான் நமக்குத் தெரியும். இசைப் பாட்டு வகையில் ஒன்று பரிபாடல். அது போலவே மற்றவையும் பாடல்களின் வகையென்று கொள்ளவேண்டும்.

இந்தத் தலைச் சங்கத்தைப் பாதுகாத்த பாண்டி யர்கள் 89 பேர் என்று கூறுவர். காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரைக்கும் உள்ள எண்பத்தொன் பது பாண்டியர்களில் புலவர்களாக இருந்தவர்கள் ஏழு பேராம். இந்தச் சங்கம் நெடுங்காலம் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. மக்கள் பெரும்பாலும் நூருண்டு வாழ்ந்து வந்த அந்த நாளில் 89 பாண்டி யர்களின் காவலில் வளர்ந்த சங்கம் 4440 வருஷம் நடைபெற்றது என்று எழுதியிருக்கிறார்கள். கிட்டத் தட்ட ஒரு பாண்டியனது ஆட்சிக் காலம் ஐம்பது வருஷங்களாகிறது. இது பொருத்தமாகவே தோன்று கிறது. ஆலுைம் இந்தக் கணக்குக்கு வேறு ஆதாரம் இல்லாமையால், குறிப்பிட்ட காலத்தை ஆராய்ச்சிக் காரர் நம்புவதில்லை. எப்படியானுலும் அகத்திய ருடைய ஆசி பெற்றுத் தோன்றிய தலைச் சங்கம் பல நூறு ஆண்டுகள் சிறந்து விளங்கி வந்தது என்ற

செய்தியை உண்மையாகக் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/37&oldid=613229" இலிருந்து மீள்விக்கப்பட்டது