பக்கம்:கன்னித் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபா ட புர ம்

தெற்கே இருந்த மதுரையில் இருந்து பாண்டிய மன்னர் ஆண்டு வந்த காலத்தில், அதற்கு வடக்கே கடற்கரையில் கபாடபுரம் என்ற பட்டினம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் முத்துக் குளித்து அருமை யான முத்துக்களை எடுத்தார்கள். வேறு நாட்டி லிருந்து வந்த வாணிகர்கள் அந்த முத்தின் அருமை யைப் பாராட்டித் தம் நாட்டுப் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து முத்துக்களை வாங்கிச் சென்றனர். பாண்டி நாடு முத்துக்குப் பேர் போனது என்ற பெருமை உலகெங்கும் பரந்தது. அதற்குக் காரணம் கபாடபுரமே யாகும்

பாண்டி நாட்டு வளப்பத்தை அறிந்து பிறநாட்டார் பாண்டிய மன்னைேடு தொடர்பு வைத்துக்கொண்டார் கள். யவனர் முதலிய புல சாதியினர் பாண்டி நாட் டுக்கு வந்து அங்குள்ள வளத்தை அறிந்து சிலகாலம் தங்கினர். தம் நாட்டுப் பொருளைக் கொடுத்தும் பாண்டி நாட்டுப் பொருளைப் பெற்றும் சென்றனர். இவ்வாறு வெளிநாட்டிலிருந்து மக்கள் கடல் வழியாக வந்து கபாடபுரத்தில் இறங்கி மதுரை முதலிய இடங் களுக்குச் சென்றார்கள். வேற்று நாட்டு வாணிகருக் குப் பாண்டி நாட்டிற் புகும் வாயில் போல இருந்தமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/38&oldid=613232" இலிருந்து மீள்விக்கப்பட்டது