பக்கம்:கன்னித் தமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கன்னித் தமிழ்


இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியம் என்ற நூலை அகத்தியர் முன்பு இயற்றினர். தலைச் சங்கத்தில் இலக்கணமாக இருந்த அதுவே இடைச் சங்கத்திற்கும் இலக்கண மாக இருந்தது. ஆனால் இலக்கணம் அதோடு நிற்க வில்லை. மொழி வளர வளர இலக்கியங்கள் வளரும். பெரும் புலவர்கள் தம்முடைய புலமைத் திறத்தால் புதிய புதிய நூல்களை இயற்றுவார்கள். அந்த நூல் களில் அமைந்த அமைதியை ஆராய்ந்து அறிந்து சொல்வதே இலக்கணம். அகத்தியம் எழுந்தபின்னர், தமிழில் எத்தனையோ நூல்கள் எழுந்தன. தமிழ்ச்சங்கம் தோன்றிய பின்னர்த் தமிழ்ப் புலவர்களுக்குப் பெரு மதிப்பு உண்டாயிற்று. மன்னர்களால் மதிப்பும் ஊக் கமும் உண்டாயின. அதனுல் அவர்கள் பல பல நூல் களை இயற்றத் தொடங்கினர். மொழியின் அழகு பலபல வகையிலே விரிந்தது.அவற்றைக் கண்டு இலக்கணமாக அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது.

இயல் முதலிய தமிழ் முன்றில் ஒவ்வொன்றும் பலபல கிளைகளாக விரிந்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்து இலக்கணம் வகுப்பது ஒருவரால் முடியாத காரியம். எனவே இயல் தமிழைத் தனியே ஆராய்ந் தனர் சிலர். மற்றவற்றையும் இப்படியே புலவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். - - -

தொல்காப்பியர் இயல் தமிழுக்கு இலக்கணம் வகுக்கத் தொடங்கினர். தொல்காப்பியம் என்ற இலக் கனத்தை இயற்றினர். இன்னும் சில புலவர்கள் இயற்றமிழாராய்ச்சியில் இறங்கினர். தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். மாபுராணம், பூதபுராணம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/42&oldid=1285983" இலிருந்து மீள்விக்கப்பட்டது