பக்கம்:கன்னித் தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபாடபுரம் 35

இரண்டு பெரிய இலக்கண நூல்கள் எழுந்தன. ஒரு புலவர் இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து இலக்கணம் இயற்றினர். அதற்கு இசை நுணுக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. எல்லாவற்றையும் இடைச் சங்கத்தார் தங்களுக்குரிய இலக்கண நூல்களாகக் கொண்டார்கள். பழைய இலக்கணமாகிய அகத்திய மும் புதிய இலக்கணங்களாகிய தொல்காப்பியம், மாபுராணம், பூத புராணம், இசை நுணுக்கம் என்ப வையும் அவர்களுக்குச் சட்ட நூல்களாயின.

இடைச் சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பல. 3700 பேர் பாடிஞர்கள் என்றால் ஆளுக்கு ஒரு பாட்டுப் பாடி யிருந்தாலும் 3700 பாட்டு ஆகியிருக் குமே! இவ்வளவு புலவர்களில் நூலாகச் செய்தவர்கள் ஆயிரம் பேரேனும் இருக்கமாட்டார்களா? ஆயிர நூல்கள் இருந்தனவென்று சொல்லலாமே! கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை யகவல் என்பன அவர்களாற் பாடப்பட்டவை என்று இறையனரகப் பொருளுரை கூறுகின்றது. இடைச் சங்க நூல் களில் தமிழருடைய அதிருஷ்டத்தினுல் இன்றுவரை உயிருடன் இருப்பது தொல்காப்பியம் ஒன்றுதான்.

இடைச் சங்கம் 3700 வருஷங்கள் நடந்துவந்தது என்று சொல்வார்கள். முடத்திருமாறன் என்ற மன் னன் காலத்தில் பாண்டி நாட்டைக் கடல் கொண்ட தாம். பூகம்பம் வந்து நாட்டின் பல பகுதிகள் மறைந் தன. பழைய மதுரையும், கபாடபுரமும், குமரி நதி, பஃறுளியாறு என்பவையும், வேறு பல பிரதேசங்களும் கடலில் மறைந்து போயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/43&oldid=613251" இலிருந்து மீள்விக்கப்பட்டது