பக்கம்:கன்னித் தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச் சங்கம்

பாண்டிய மன்னர்கள் தம் ஆணையைப் பரப்புவ தைக் காட்டிலும் தமிழைப் பரப்புவதில் பேரார்வம் கொண்டவர்கள். எங்கே இருந்தாலும் தமிழ்ப் புலவர் களுடைய உறவையும் பாதுகாப்பையும் தலைமையான செயலாகக் கருதுபவர்கள். அதனுல் தமிழ் நாடு என்று சொன்னுல் பாண்டிநாடு என்று அர்த்தம் செய்யும் சிறப்பு உண்டாயிற்று. பாண்டியனுக்குச் செந்தமிழ் நாடன் என்ற பெயர் ஏற்பட்டது. சோழ நாட்டுக்கு நீர் நாடு என்று வேறு ஒரு பெயர் உண்டு. சோழ அரசனுல் ஆளப்பெறுதலின் சோழ நாடு ஆயிற்று. இயற்கையில் நீர் வளம் மிக்கிருத்தலினுல் நீர் நாடு என்ற பெயர் வந்தது. சேரர் அரசாண்டதல்ை சேரநாடு என்ற பெயர் பெற்ற நாட்டில் மலைகள் மிகுதியாக இருப்பத குல் மலைநாடு என்ற பெயரும் அமைந்தது.அப்படியே அரசனை நினைந்து அமைந்த பெயரையுடைய பாண்டி நாடு தமிழைத் தனி உரிமையாகப் பெற்றமையின் தமிழ் நாடு என்று செய்யுளில் வழங்கும்.

இடைச் சங்கம் கபாடபுரத்தில் நிகழ்ந்துகொண் டிருந்த காலத்தில் கடல் கோள் நிகழ்ந்தது என்பதற் குத் தமிழ் நூல்களில் ஆதாரம் இருக்கின்றது. இறை யனரகப்பொருள் உரையில், அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்து என்ப. அக்காலத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/45&oldid=613257" இலிருந்து மீள்விக்கப்பட்டது