பக்கம்:கன்னித் தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

கன்னித் தமிழ்


போலும் பாண்டியன் நாட்டக்ை கடல் கொண்ட்து’ என்று இடைச் சங்கத்தின் வரலாறு வருகிறது. கடைச் சங்கத் தைப் பற்றிய செய்தியில், “அவர்களைச் சங்கம் இரீஇயி ர்ை கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி வீருக நாற்பத்தொன்ப தினர் என்ப’ என்ற பகுதி இருக்கிறது. இவற்றால் கடல் பொங்கிப் பாண்டி நாட்டின் ஒரு பகுதியை அழித்த காலத்தில் இடைச் சங்கம் நிகழ்ந்ததென்றும், அந்தப் பூகம்பத்தில் தப்பிவந்த முடத்திருமாறன் என்ற பாண்டியன் கடைச் சங்கத்தைத் தொடங்கி நடத்தி வந்தான் என்றும் தெரியவருகிறது.

இப்படிக் கடல் பொங்கி அழித்த பகுதியை அடி யார்க்கு நல்லார் என்ற உரையாசிரியர் சிலப்பதிகார உரையில் குறித்திருக்கிறார். தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத ஆறும் இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகாரை நாடும், ஏழ் குறும்பணை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண்டது’ என் பது அவர் தெரிவிக்கும் செய்தி.

முடத்திருமாறன் இப்போது உள்ள மதுரையைத்

தலைநகராக்கி ஆளத் தொடங்கின்ை. மதுரைப் புரா

ணம், பாரதம் முதலிய நூல்களிலிருந்து இந்த நகரம் புதிதாகப் பாண்டியல்ை அமைக்கப்பட்ட தென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/46&oldid=1285984" இலிருந்து மீள்விக்கப்பட்டது