பக்கம்:கன்னித் தமிழ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

கன்னித் தமிழ்


இந்தக் கடைச் சங்கத்தில் தம்முடைய பாட்டை அரங்கேற்றினவர்கள் 449 புலவர்கள் என்று கூறுவர். அவர்களுக்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக் கண நூல்களாக இருந்தன. முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரையில் 49 பாண்டியர்கள் 1850 ஆண்டு கடைச் சங்கத்தை நடத்தி வந்தார்களாம். இந்த 49 மன்னர்களுள் மூன்று பேர் சங்கப் புலவர் களாகவே விளங்கினுர்கள்.

அக்காலத்தில் சங்கத்தில் அரங்கேற்றம் பெற்ற நூல்கள் பல. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற முப்பத்தாறு நூல்கள் கடைச் சங்க நூல்கள். கூத்து நூல் சிலவும் வரிப் பாட்டும் சிற்றிசை, பேரிசை என்ற இசைப் பாடல் களும் அக்காலத்தில் எழுந்தன.

இராமாயணம் கடைச் கங்க காலத்தில் தமிழில் இருந்தது. பெருந் தேவனுர் என்ற புலவர் பாரதத் தைத் தமிழில் பாடினர். தகடூர் யாத்திரை என்ற போர்க்காவியம் ஒன்றைப் பல புலவர்கள் சேர்ந்து பாடினர். ஆசிரிய மாலை, மார்க்கண்டேயனர் காஞ்சி முதலிய நூல்களும் கடைச் சங்க காலத்தில் உண்டாயின. * ,

இத்தனை நூல்களுள் இப்போது கிடைப்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்ற முப்பத்தாறு நூல்களே. இராமாயணம். பாரதம், தகடுர் யாத்திரை, ஆசிரிய மாலை என்னும் நூல்களிலிருந்து சில பாடல்கள் உாைகளினிடையே மேற்கோளாக வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/48&oldid=1285985" இலிருந்து மீள்விக்கப்பட்டது