பக்கம்:கன்னித் தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச் சங்கம் 41

புலவர்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திருந்த சங்கம் தமிழ் மக்களின் மதிப்புக்கு உரியதாயிற்று. அரசர்களை யும் அடக்கும் ஆணைதாங்கிப் புலவர்கள் தமிழை வளம் படுத்தினர். சாதி, சமயம், நாடு, தொழில் என்ற வேறு பாடுகளை நினையாமல் ஒன்றுபட்டு வாழ்ந்த புலவர்கள் நாட்டில் ஒற்றுமையை நிலை நிறுத்தும் விஷயத்தில் ஈடுபட்டார்கள். தமிழ் மரபைப் பாதுகாத்துப் புதிய புலவர்களுக்கு ஊக்கம் உண்டாக்கினர். புதிய புதிய துறைகளில் நூல் செய்பவர்களுக்கு ஆதரவு அளித் தனர். இதல்ை தமிழ் மேன்மேலும் வளர்ந்து வந்தது.

இயல் தமிழைப் புலவர்கள் ஆராய்ச்சி செய்தது போலவே இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் தனித் தனிச் சங்கம் அமைத்துப் புலவர்கள் ஆராய்ந் தனர். வரவர அவை விரிந்து வந்ததனுல்தான் இப் படித் தனியே இசைச் சங்கமும் நாடகச் சங்கமும் நிறுவ வேண்டி நேர்ந்தது. ஆரம்பத்தில் அகத்தியம் ஒன்றையே மூன்று தமிழுக்கும் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அப்பால் நாளடைவில் ஒவ்வொரு துறையிலும் தனித் தனியே ஈடுபட்டுத் தனித்தனி: இலக்கணத்தைப் புலவர்கள் வகுத்தனர். அதல்ை ஒவ்வொரு தமிழையும் தனியே ஆராய்ச்சி செய்வதற்கு வாய்ப்பு உண்டாயிற்று. மேலும் மேலும் தமிழ் விரிந் தது. நூல்கள் மலிந்தன. மூன்று தமிழுக்கும் தனித் தனியே இலக்கணம் அமைந்ததோடு நில்லாமல் ஒவ் , வொரு தமிழிலும் ஒவ்வொரு பகுதிக்குத் தனித்தனியே இலக்கணங்கள் எழுந்தன.

புலவர்களின் ஒற்றுமையையும் அவர்கள் கூடிச் சங்கத்தில் தமிழாராய்ந்த சிறப்பையும் நூல்கள் பல படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/49&oldid=613270" இலிருந்து மீள்விக்கப்பட்டது