பக்கம்:கன்னித் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச் சங்கம் 43°

தொல் ஆஃண நல் ஆசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் திலந்தரு திருவின் நெடியோன். இது மதுரைக் காஞ்சியில் வருகிறது.

இவ்வாறு வாழ்ந்த புலவர்கள் தமிழ் நாட்டுக்கே கல்வியையும் ஒழுக்கத்தையும் உபதேசிக்கும் உபகாரி களாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய கூட்டந்தான் சங்கம். அவர்களுடைய ஆராய்ச்சியிலே புகுந்து சாணையிடப் பெற்றுவந்த நூல்களேயே தமிழ் நாட்டார் ஏற்றுக் கொண்டனர். சங்கத்தில் ஏறிய தமிழ்தான் தமிழ் என்று தமிழர் கொண்டனர். அதனுல்தான் சங்கத் தமிழ், சங்கமலி தமிழ் என்ற சிறப்பு இந்தத் தென்மொழிக்கு உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/51&oldid=613280" இலிருந்து மீள்விக்கப்பட்டது