பக்கம்:கன்னித் தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி ய ம்

அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் இலக் கணம் மிக விரிவாக அமைந்தது. அந்த நூல் நமக்குக் கிடைக்காவிட்டாலும் அதைப் பற்றிய செய்திகளைப் பழைய உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். சில இடங்களில் அகத்தியத்திலிருந்து சூத்திரங்களை எடுத்து மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

இயல், இசை நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் தனித்தனிப் பிரிவாக இலக்கணங்கள் அகத்தியத்தில் இருந்தன. எழுத்து, சொல், பொருள் என்றவற்றைப் பற்றிய இலக்கணங்களை இயல் தமிழ்ப் பிரிவில் அமைத்தார். பண்கள், அவற்றின் இனங்களாகிய திறங்கள், பாடல் வகை, நரம்புகளின் வகை, வாத்தி யங்களின் அமைப்பு முதலிய செய்திகள் இசையிலக் க்ண்த்தில் வந்தன. கூத்தன் இலக்கணம், அபிநயம், பாவம் முதலியவற்றைப் பற்றிய செய்திகள் நாடகத் தமிழ் இலக்கணத்தில் வைத்துச் சொன்னர்.

இப்போது கிடைக்கும் சில சூத்திரங்களிலிருந்து அகத்திய மென்னும் கடலின் ஒரு துளியை அறிந்து கொள்ளலாம்; அவ்வளவுதான்.

தமிழில் உள்ள சொற்களை ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு வகையாகப் பிரிப்பார்கள். சொல்லில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/52&oldid=613283" இலிருந்து மீள்விக்கப்பட்டது