பக்கம்:கன்னித் தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியம் 45

உள்ள எழுத்துக்களையும் பொருளையும் பற்றிய பிரிவு கள் இருக்கின்றன. அர்த்தத்தை எண்ணிப் பிரித்த சொற் பிரிவு நான்கு பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல் என்று நான்காகச் சொல் வர். இடைச் சொல், உரிச் சொல் என்ற பாகுபாட்டை இலக்கண அறிவு வந்தவர்களே அறிவார்கள். ஆனல் பெயர்ச் சொல், வினைச் சொல் என்ற பாகுபாட்டைப் பொதுவாக யாவருமே அறியக்கூடும். அந்த இரண் டுமே முக்கியமானவை என்பது இலக்கண ஆசிரியர் கொள்கை. ஒரு பொருளின் பெயரைச் சொல்வது பெயர்ச் சொல். அதன் தொழிலைச் சொல்வது வினைச் சொல். -

இந்த இரண்டுமே தலைமையானவை யென்று அகத்தியர் சொல்லுகிறார். ஒரு மொழியின் மூலங் களைப் பகுத்துப் பார்த்தால் அதில் உள்ள சொற்க ளெல்லாம் பெயரிலும் வினையிலும் அடங்கிவிடும்” என்பது அவர் கூறும் இலக்கணம்.

“பெயரினும் வினையினும்

மொழிமுதல் அடங்கும்.’

எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகின்றன. சொல் ஒரு பொருளை உணர்த்துவது. அர்த்தமில்லாத வார்த்தை இல்லை. அப்படி இருந்தால் அதற்குச் சொல் என்ற பெயர் இல்லை. அது வெறும் ஒலி யாகவே இருக்கும். ஒருவன் முக்கி முனகுகிருன்; அந்த ஒலி காதில் விழுகிறது. அது சொல்லாகாது. ஒருவன் சீட்டி அடிக்கிருன். அது வெறும் ஒலியே ஒழியச் சொல்லாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/53&oldid=613286" இலிருந்து மீள்விக்கப்பட்டது