பக்கம்:கன்னித் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியம் 4?

மாத்திரம் தெரிகிறது. மேலே மூளைக்கு அது ஏருமல் போகிறது.

ஆகவே ஒரு சொல் முதலில் தன் உருவமாகிய ஒலியைப் புலப்படுத்துகிறது. அதன் பிறகே பொருளைத் தெரிவிக்கிறது. ‘சொல்லானது தன்னை யும் தன் பொருளையும் உணர்த்தும் இயல்பை உடை யது’ என்று இலக்கணக்காரர் சொல்வர். அகத்தியர் இதற்கு உவமைகள் கூறி விஷயத்தை விளக்கு கிறார்.

வயிரம் வயிரத்தை அறுக்கும் என்று சொல்வார் கள். வயிர ஊசி கண்ணுடி முதலிய பொருள்களை அறுக்க உபயோகப்படும் கருவி. அது வயிரத்தையும் அறுக்க உபயோகப்படும். அப்படியே இரும்பாலான அரம் மற்ற உலோகங்களை அராவுவதற்கு உபயோக மாவதோடு இரும்பையும் அராவப் பயன்படுகிறது. பொன்னை உரைத்துப் பார்க்கும் உரையாணியும் இந்த இனத்தைச் சார்ந்ததே. இவை மற்றவற்றைச் சோதிக்கும் விஷயத்தில் கருவியாக நிற்பதோடு தம் மைச் சோதிக்கும் கருவியாகவும் நிற்கின்றன. சொல் லும் அத்தகையதுதான். பிற பொருளைச் சுட்டுவ தோடு தன்னையே, தன் உருவத்தையே, சுட்டுவதற்கும் அது உதவுகிறது. அகத்தியர் இந்தச் செய்திகளைச் சூத்திரமாகச் சொல்லியிருக்கிருச்.

வயிர ஊசியும்

மயன்வினே இரும்பும்

செயிரறு பொன்னேச்

செம்மைசெய் ஆணியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/55&oldid=613294" இலிருந்து மீள்விக்கப்பட்டது