பக்கம்:கன்னித் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

கன்னித் தமிழ்


தமக்கமை கருவியும்

தாமாம் அவைபோல் உரைத்திறம் உணர்த்தலும்

உரையது தொழிலே.

இந்தச் சூத்திரத்திலிருந்து மொழியின் இலக் கணத்தைத் தெரிந்துகொள்வது ஒன்று. அதைக் காட்டிலும் சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு. இலக்கண நூல்கூடச் சரித்திர ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் என்ற உண்மையை இதனுல் தெரிந்து கொள்ளலாம். அதைப்பற்றிக் கொஞ்சம் கவனிப் போம்.

‘தமிழ்ச் சொல் தன் ஒலி உருவத்தைப் புலப்படுத் துவதோடு அதேைல சுட்டப்படும் பொருளையும் தெரிவிக்கும் என்பது இந்தச் சூத்திரத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் மொழி இலக்கணம். இந்தச் செய்திக்கு உபமானமாக அகத்தியர் மூன்று கருவிகளை எடுத்துக் காட்டுகிறார்.

வயிர ஊசி, மயன்வினை யிரும்பாகிய அரம், உரை யாணி என்ற மூன்று கருவிகளை இந்தச் சூத்திரம் சொல்கிறது. அந்த மூன்றையும் உபமானமாகச் சொன்னல் சொல்ல வந்த விஷயம் தமிழர்களுக்கு நன்றாக விளங்குமென்பது முனிவர் கருத்து. ஆகவே, இந்த மூன்று கருவிகளும் இவற்றால் நடைபெறும் காரியங்களும் அகத்தியர் காலத்துத் தமிழர்களுக்குத் தெரிந்தவை என்று சொல்லலாம் அல்லவா? இது தான் சரித்திரம், இலக்கணத்திலிருந்து கூடச் சரித் திரத்தைக் காட்டலாம் என்று சொல்வதில் ஏதாவது

பிழை உண்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/56&oldid=1285988" இலிருந்து மீள்விக்கப்பட்டது