பக்கம்:கன்னித் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியம் 49

வயிரம், இரும்பு, பொன் என்பவற்றைத் தமிழர் தம் வாழ்க்கையிலே பயன்படுத்திக் கொண்டனர். வயி ரத்தால் ஊசி செய்து வேறு மணிகளைத் துளைத்ததோடு, வயிரத்தையும் அதனுலே சாணையிட்டு வந்தனர். இரும்பை அராவி இருப்புக் கலங்களை இயற்றினர். பொன்னின் மாற்றை உரையாணியால் அறிந்தனர். அகத்தியர் காலத்தில் வயிரமும், பொன்னும், இரும்பும் தமிழர் வாழ்க்கையில் வந்துவிட்டன. அவற்றைத் தக்க வண்ணம் பயன்படுத்திக் கொண்டனர். அவர் களுடைய நாகரிகம் உயர்ந்ததென்று இதல்ை தெரி கிறது.

  • .

ஒன்று, பல என்ற வித்தியாசத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஒரிடத்தில் வருகிறது. ஒரே பொருள் ஒரு வகையிலே பலவாகவும் ஒரு வகையிலே ஒன்றாகவும் இருக்கும். மாலையில் பல மலர்கள் இருக்கின்றன. பல பொருள்கள் கூடி அமைந்த பொருள் அது. ஆயினும் அப்படிக் கூடிய தொகுதியாக நிற்கும்போது அத்தொகுதிப் பொருளை ஒன்றாகக் குறிக்கிருேம்; மாலை யென்ற ஒன்றாக வழங்குகிருேம். மாலையாகப் பார்க்கும் போது அது ஒன்று; மலர்களாகப் பார்க்கும்போது பல. இப்படியே, ஒரு பெரும் படை இருக்கிறது. பல ஒன்றுகள் சேர்ந்த ஒன்று அது; பல வீரர்கள் சேர்ந்த படை. வீரர்களாகப் பார்க்கையில் பன்மை தோன்று கிறது. படையாகப் பார்க்கையில் ஒருமை தோன்று கிறது. இப்படியே சோறு, கறி, பச்சடி என்ற பல பண்டங்கள் சேர்ந்து உணவு என்ற ஒன்று ஆகின் றன. பல ஏடுகள் சேர்ந்து ஒரு புத்தகம் ஆகின்றன.

4 --” - “ - --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/57&oldid=613301" இலிருந்து மீள்விக்கப்பட்டது