பக்கம்:கன்னித் தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

கன்னித் தமிழ்


பல பலகைகளும் ஆணியும் சேர்வதல்ை ஒரு கதவு அமைகிறது. பல நூல்கள் கூடி ஒரு கம்பலத்தை உண் டாக்குகின்றன. மலராகிய ஒன்றுக்கும் மாலையாகிய ஒன்றுக்கும் வித்தியாசம் உண்டு. மலர் தனியான ஒன்று. மாலையென்பது பல பொருள்கள் சேர்ந்த

ஒன்று. அதைப் பலவின் இயைந்த ஒன்று என்று அகத் தியர் சொல்கிறார்.

பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே

அடிசில் புத்தகம் சேனே அமைந்த

கதவம் மாலே கம்பலம் அனைய என்பது அவர் கூறும் சூத்திரம்.

பல பொருளும் சுவையும் கலந்த உணவை

உண்டு, பல ஏடுகளைச் சேர்த்த சுவடிகளைப் பயின்று, பல வீரர்கள் சேர்ந்த படைகொண்டு போர் செய்த னர் தமிழர். பல பலகைகளை இணைத்த கதவை மனை யில் அமைத்தனர். மலர் மாலை சூடினர். கம்பலத் தைப் பயன்படுத்தினர். இந்தச் சரித்திரச் செய்தி களையும் சூத்திரம் தெரிவிக்கின்றது. அன்றியும் புத்த கம், சேனை, கம்பலம் என்ற வட சொற்கள் அகத்தியர் காலத்திலே தமிழாகிவிட்டன என்ற செய்தியும் தெரிய

வருகிறது.”

இவ்வாறு அகத்தியத்தில் இப்போது கிடைக்கும் சூத்திரங்களைக் கொண்டு ஆராய்ந்தால் தமிழர் வாழ்க் கையைக் குறித்த சில செய்திகள் தெரியவரும்.

அகத்தியர் காலத்தில் வடமொழி வியாகரணம் ஒன்று எட்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையில்

அடக்கிக் கூறியது. இந்திரன் இயற்றிய வியாகரணம்

  • இந்தச் சூத்திரங்கள பழைய அகத்தியச் சூத்திரங்கள் அல்ல என்பது சில ஆராய்ச்சியாளர் கொள்கை,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/58&oldid=1285989" இலிருந்து மீள்விக்கப்பட்டது