பக்கம்:கன்னித் தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியம் 51

ஒன்று வழக்கில் இருந்தது. ஒரே சொல்லைப் பொருள்

சிறந்து நிற்பதற்காக இரண்டு தடவையும் மூன்று

தடவையும் நான்கு தடவையும் சொல்வதுண்டு. இவை

சில சூத்திரங்களால் தெரியவரும் செய்திகள்.

大 அகத்தியர் செய்யுள் சம்பந்தமாகச் சொல்லியிருக்

கும் சில சூத்திரங்களும் கிடைக்கின்றன. இசைத்

தமிழ் சம்பந்தமாக அவர் இயற்றிய சூத்திரம் ஒன்றும்

கிடைக்கவில்லை. ஆயினும், “அகத்தியனர் இப்படிச்

சொன்னர்’ என்று தெரிவிக்கும் சூத்திரங்கள் சில

உண்டு. அவற்றால் இசை நாடகங்களுக்கும் அவர்

இலக்கணம் வகுத்தார் என்பது தெரிய வரும்.

பாலையென்பது ஒரு பண். பண்ணிலிருந்து பிறக்

கும் இனங்களைத் திறம் என்று கூறுவர். ஒவ்வொரு

பண்ணுக்கும் திறங்கள் உண்டு. பாலைப் பண்ணுக்கு ஐந்து திறங்கள் உண்டு. ஜனக ராகம், ஜன்ய ராகம் என்று கர்நாடக சங்கீதத்தில் இரண்டு வகை இருக் கின்றன. ஜனக ராகத்தை மேளகர்த்தா என்றும் சொல்வர். அதைப்போன்றதுதான் பண். அதிலிருந்து பிறப்பது திறம். பாலைப்பண் ஒரு மேளகர்த்தாவைப் போன்றது. அதிலிருந்து பிறக்கும் திறங்கள்: தக்க ராகம், நேர்திறம், காந்தாரபஞ்சமம், சோமராகம், காந் தாரம் என்ற ஐந்துமாகும். இப்படி அகத்தியனர் சொன்னதாக வேறொரு புலவர் எடுத்துக் காட்டுகிறார்.

......என்றைந்தும்

பாலைத் திறம்என்றார் பூந்தார் அகத்தியஞர்

போந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/59&oldid=613308" இலிருந்து மீள்விக்கப்பட்டது