பக்கம்:கன்னித் தமிழ்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: y

அப்படியே நம்பக்கூடாது. ஆனல் அவற்றில் இம்மியும் உண்மை இல்லை என்று சொல்வதும் தவறு. உரைகளின் மூலம் கிடைக்கும் செய்திகளேயெல்லாம் தொகுத்து ஒட்டிப் பார்த்தால் தமிழின் பழ்மை ஒருவாறு தெரியும். நெடுந்துரத்தில் புகையின் நடுவே ஒரு ம்ாளிகை தெரிவது போல அது புலப்படும். -

பல இடங்களிலே கண்ட இந்தச் செய்திகளைத் தொகுத்து வகைப்படுத்திச் சில கட்டுரைகளைத் தினமணி யில் எழுதி வந்தேன். அதன்பின் தொல்காப்பியத்தைப் பற்றிப் பல கட்டுரைகளே எழுதினேன். தோற்றுவாயாக முதலில் எழுதிய பதினொரு கட்டுரைகள் இந்தப் புத்தகத் தின் முதலில் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் துணுக்கமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அல்ல. கால் இல்லாத கட்டுக் கதைகளும் அல்ல. சொல்வதைத் தெளி வாகச் சொல்லவேண்டும் என்ற ஆசையினலே எழுதியவை

பின்னே உள்ள கட்டுரைகள் அவ்வப்போது பல புத்திரிகைகளுக்கு எழுதியவை. கலயைப் பற்றியனவும், வ்ெவ்வேறு நூல்களில் கண்ட செய்திகளை ஒப்பு நோக்கும் வகையில் அமைந்தனவும், பழஞ் செய்யுட்களின் விளக்கமாக இருப்பனவும் ஆகப் பின்னல் உள்ள கட்டுரைகள் இருப்பதைக் காணலாம். பொதுவாக எல்லாக் கட்டுரைகளுமே இலக்கியங்களே. ஆதாரமாகக் கொண்டவை. கன்னித் தமிழின் நலங்களிற் சிலவற்றை எடுத்துக் கூறுபவை. கன்னித் தமிழ் என்ற பெயர் கொண்ட கட்டுரை ஒன்றும் இதில் இருக்கிறது. அந்தப் பெயரையே இந்தத் தொகுப்பு நூலுக்கு வைத்தேன். .

துணுகி நுணுகி ஆராய்ந்து செல்லும் ஆராய்ச்சிகள் நமக்கு இன்றியமையாதவை; அவை உண்மையைக் காண முயலபவை. அவற்றேடு இலக்கியத்தை நுகரச் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/6&oldid=613311" இலிருந்து மீள்விக்கப்பட்டது