பக்கம்:கன்னித் தமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

கட்டுரைகளும் நமக்கு வேண்டும். இலக்கியம் சுவை உணர அமைந்தது. ஒரு நூலைப் படித்து இன்புறுகிறவன் அதன் உள்ளே சென்று ஆழ்ந்து நிற்கிறான். ஆராய்ச்சி செய்கிறவன் அதனூடே கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டுவந்து வெளியிலே குவித்து வேறு இடங்களில் கிடைக்கும் குறிப்புக்களையும் தொகுத்து இரண்டையும் ஒப்பு நோக்கி முடிவு கட்ட முயல்கிறான். முன்னவன் உணர்ச்சியைத் தலைமையாகக் கொண்டு நூலைப் படிக்கிறான். பின்னவன் அறிவைத் தலைமையாகக் கொண்டு படிக்கிறான். இருவரும் நூலைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இரண்டு முறையும் நமக்கு வேண்டியவையே.

இதில் உள்ள கட்டுரைகள் அநுபவிக்கும் துறையில் அமைந்தவை. ஆதலின் காலவரையறை முதலிய ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்க்கிறவர்களுக்கு இதில் பாராட்டத்தக்க பகுதி ஏதும் காண இயலாது. இலக்கியத்தை நுகர்பவர்களுக்கு இவற்றில் சில கட்டுரைகளாவது இன்பத்தை அளிக்கும் என்று நம்புகிறேன். அத்தகைய நம்பிக்கை தானே எழுத்தாளனுடைய பேனாவை மேலும் மேலும் வேகமாக ஒட்டும் தூண்டுகோலாக உதவுகிறது:

4—11—54

கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/7&oldid=1297679" இலிருந்து மீள்விக்கப்பட்டது