பக்கம்:கன்னித் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னித் தமிழ் 59.

மொழியின் அமைப்பு மாறி வருவதல்ை இலக்கணமும் மாறுகிறது.

தமிழ்மொழி பல காலமாகத் தமிழருடைய கருத் தைப் புலப்படுத்தும் கருவியாக இருந்தது. பிறகு கலைத் திறமை பெற்றுப் பல பல நூல்களாகவும் உருப் பெற்றது. மனிதர்கள் பேசும் மொழி, தினந்தோறும் உண்ணும் உணவைப் போன்றது. அவருள்ளே புலவர் இயற்றிய நூ ல் க ள், வசதியுள்ளவர்கள் அமைத்த விருந்தைப் போன்றவை. தமிழில் இந்த இரண்டுக்கும் பஞ்சமே இல்லை.

பேச்சுவழக்கு மாயாமல் நூல் சிருஷ்டியும் மங்கா மல் மேலும் மேலும் வளர்ந்துவரும் ஒரு மொழியில் அவ்வப்போது புதிய புதிய துறைகள் அமைவது இயற்கை. புதிய புதிய அழகு பொலிவதும் இயல்பே. தமிழில் இப்படி உண்டான மாற்றத்தைப் பார்த்தால் மிக அதிகமென்று சொல்ல முடியாது. புதிதாக உண் டான மொழியில்தான் புதிது புதிதாக வளர்ச்சி உண் டாகும். ஒரு மரம்-செடியாக இருக்கும்போது மாதத் துக்கு மாதம் அதன் வளர்ச்சி நன்றாகத் தென்படும். ஆனல் அது மரமாக வளர்ந்து சேகேறி வானளாவிப் படர்ந்து நிற்கும்போது அதில் உண்டாகும் வளர்ச்சி அவ்வளவாகத் தென்படாது. தன்பால் உண்டான வயிரத்தைப் பாதுகாத்துக் கொண்டு அது நிற்கும். அவசியமான வளர்ச்சி யெல்லாம் அமைந்து விட்டபடி யால் புதிய புதிய மலரையும் குழையையும் தோற்று விக்கும் அளவோடு அது தன் புதுமையைக் காட்டும். தமிழ் இப்படி வளர்ந்து சேகேறிப்போன மொழி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டான தொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/67&oldid=613338" இலிருந்து மீள்விக்கப்பட்டது