பக்கம்:கன்னித் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

கன்னித் தமிழ்


கவனித்தார்கள். கவனித்து ஆராய்ந்ததைத் தனியே எழுதினர்கள். அதுதான் இலக்கணம். ஒரு பொருள் இருந்தால் அதற்குக் குணம் உண்டு. அந்தக் குணத்தை அதிலிருந்து வேறு பிரிக்க முடியாது. ஆனாலும் அதைப் பற்றிப் பேசும் போதும் ஆராய்ச்சி பண்ணும்போதும் குணத்தைத் தனியே எடுத் துச் சொல்லி விவகரிக்கிருேம். ரோஜாப் பூவிலே செம்மை இருக்கிறது. செம்மையை ரோஜாப் பூவி லிருந்து பிரிக்க முடியாது. ஆனாலும் ரோஜாப்பூவில் செம்மை நிறம் இருக்கிறது என்று பேச்சில் வழங்கு கிருேம். அதுபோலவே மொழியில் ஒரு வரம்பு இருக் கிறது என்று சொல்கிருேம். இந்த வரம்புக்கு இலக்கணம் என்ற பெயரைப் பெரியோர்கள் கொடுத்திருக்கிறார்கள். தமிழாகியரோஜாப்பூவின் குணம் இலக்கணம். அந்த இலக்கணத்தைத் தனியே பிரிக்க முடியாது; ஆல்ை தனியே பார்க்கலாம்; தனியே விவகரிக்கலாம்.

ரோஜாப்பூவுக்குச் செம்மை இயற்கையாகவே அமைந்ததுபோல மொழிக்குரிய வரையறையும் அது பிறந்தபோதே அமைந்து விட்டது. ஆலுைம் சீதோஷ்ண நிலையிலுைம் தாவர நூலாருடைய முயற்சியாலும் ரோஜாப்பூவின் நிறத்தில் வேறுபாடு கள் அமைவது போலத் தமிழின் வரையறைகள் மாற லாம். அந்த மாற்றம் நினைத்த பொழுது நினைத்தவர் கள் நினைத்தபடி அமைவது அல்ல. அது மாற்றப்படுவது அன்று தானே மறுவது. அந்த மாற்றத்தை உணர்ந்து இன்னபடி மாறியிருக்கிற தென்று ஒரு புலவன் சொன்னல் அது புதிய இலக்கணம் ஆகும். அந்தப் புதிய இலக்கணத்துக்காக மொழி மாறுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/66&oldid=1285993" இலிருந்து மீள்விக்கப்பட்டது