பக்கம்:கன்னித் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னித் தமிழ் 57

தனிமை உண்டு. அதை முதலில் குழந்தை தெரிந்து கொள்கிறது. பிறகு ஊராரோடு பழகி அது தன் பேச்சை விருத்தி செய்து கொள்கிறது. இந்தப் பழக்கம் நடை கற்பதுபோல இயற்கையாகவே வருகிறது. அயல் வீட்டில் வாழ்பவர்கள் நெருங்கிப் பழகுபவர்களாக இருந்து, அவர்கள் வேறு மொழி பேசில்ை, அதையும் குழந்தை எளிதில் பழகிக் கொள்கிறது. வீட்டில் ஒரு மொழியும் வெளியில் வேறு மொழியும் வழங்கும் இடங்களில் வளரும் குழந்தை களுக்கு அந்த இரண்டும் மிக எளிதில் வந்து விடு கின்றன. -

இதனுல் அந்த இரண்டு மொழிகளும் மிகவும் சுலபமாக எல்லோருக்கும் வந்துவிடும் என்று சொல்ல லாமா? மொழிக்குச் சில வரையறைகள் இருக்கின் றன. மொழி வழங்கும் சமுதாயத்துக்குப் புறம்பே இருந்து அந்த மொழியைக் கற்றுக் கொள்கிறவர் களுக்கு அதன் வரையறைகள் தனியே தோற்றும்; கஷ்டமாகவும் இருக்கும். அந்தச் சமுதாயத்திலே பிறந்து வளரும் மக்களுக்கோ அநேகமாக அந்த வரையறையைத் தனியே கவனிக்கும் சந்தர்ப்பம் இருப்பதில்லை. அவர்கள் கவனிக்காவிட்டாலும், வரை யறையான அமைப்பை உடைமையில்ைதான் ஒரு மொழி, மொழி நிலையை அடைகிறது என்ற உண்மை எப்போதும் உண்மையாகவே நிற்கும்.

தமிழ் மொழி தமிழுலகம் என்னும் இடத்தில் வழங்குவது. அதற்கு இட வரம்பு உண்டு; இன்ன கருத்தை இப்படிச் சொல்ல வேண்டும் என்ற முறை உண்டு. அந்த முறையைத் தனியே புலவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/65&oldid=613332" இலிருந்து மீள்விக்கப்பட்டது