பக்கம்:கன்னித் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

கன்னித் தமிழ்


விளங்குகிறதா? இல்லை. அந்தக் குழந்தையின் கருத்தை யாருமே உணர்வதில்லையா? சிலர் உணர்ந்து கொள்கிறார்கள். அந்தக் குழந்தையினிடம் அன்பு வைத்துப் பழகுபவர்கள் அது இன்னது வேண்டு மென்று கேட்கிறது என்ற கருத்தைத் தெரிந்து கொண்டு, அந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொன்னதாகவே கொள்கிறார்கள். போக்கிரி, பால் வேண்டுமென்று கேட்கிருன்! என்று அயல் வீட்டுக் காரருக்கும் அந்த மொழியின் பொருளை விளக்கு கிறார்கள். அவர்கள் எப்படித் தம் குழந்தையின்பால் உள்ள அன்புச் சிறப்பால் அதன் கருத்தை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ற வாக்கியங்களைத் தாங்களே பெய்து கொள்ளுகிறார்களோ, அப்படி என் திறத்தில் பெரியவர்கள் செய்யவேண்டும்” என்றுடபொருள் விரியும்படியாகச் சேக்கிழார் பாடி யிருக்கிறார்.

செப்பல் உற்ற பொருளின் சிறப்பினுல் அப்பொருட்குரை யாவரும் கொள்வரால்,

(பொருள்-குழந்தை. அப் பொருட்கு உரை-அந்த அர்த்தத்துக்கு ஏற்ற மொழியை.)

குழந்தை பிறகு மொழியைத் தெரிந்து கொள் கிறது. ஆனல் ஊமை எப்போதும் தெரிந்து கொள்வ தில்லை. காரணம்.பிறர் பேசும் ஒலியைக் கேட்டு அந்த மாதிரி-பேச.அவனுக்குச் செவி இல்லை. உதட்டையும் நாக்கையும் பார்த்து ஏதோ சிரமப்பட்டு உளறுகிருன். பாஷை அந்த முயற்சிக்குள்ளே அடங்கினது அல்லவே! .

தமிழ் நாட்டில் தமிழை ஒவ்வொரு வீட்டிலும் பேசுகிறார்கள். அந்த வீட்டுப் பேச்சிலே கூட ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/64&oldid=1285992" இலிருந்து மீள்விக்கப்பட்டது