பக்கம்:கன்னித் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னித் தமிழ் 55

கிறது. அந்த மொழியைக் கடவுள் ஒருவரே புரிந்து கொள்ள முடியும்.

மாதக் கணக்கில் வளர்ந்த குழந்தை அழுகை யொலியும், ‘ங்கு சப்தமும் மாறி வளர்ந்து மழலை பிதற்றத் தொடங்கும்போது, அதன் தாய் தந்தையர் பழக்கத்தால் அந்தக் குழந்தையின் பேச்சுக்குப் பொருள் தெரிந்து கொள்கிறார்கள். அந்தப் பருவத் தில் ஒவ்வொரு குழந்தையின் பேச்சும் அந்த அந்தக் குழந்தையின் பெற்றாேருக்குத்தான் அர்த்தமாகும். சேக்கிழார் என்ற புலவர் இதை ஓரிடத்திற் சொல்லு கிறார். பெரிய புராணத்தில் அவையடக்கத்தில் இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறார்,

‘'என் மனசுக்குள் சிவபக்தர்களுடைய பெருமை யைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதல்ை இந்த நூலைப் பாடினேன். என் கருத்து முழுவதையும் இந்த நூல் வெளியிடாமல் இருக்கலாம். ஆலுைம் என் கருத்து இன்ன தென்று உணர்ந்த பெரியவர்கள்.அந்தக் கருத்துக்கு ஏற்ற சொற்களும் அமைப்பும் இதில் இல்லாவிட்டாலும் அவை இருப்ப தாகவே பாவிக்க வேண்டும்; தாமே அவற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும்’ என்று அவை யடக்கம் சொல்ல வந்தவர், அதற்கு உவமை ஒன்று காட்டு கிறார்.

‘குழந்தை பேசும்போது அது ஏதோ ஒன்றைக் கருதித்தான் பேசுகிறது. அந்தக் கருத்தைத் தன் மழலைச் சொல்லால் தெரிவித்து விடலாம் என்ற ஆசையோடு பேசுகிறது. ஆனல் யாவருக்கும் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/63&oldid=613324" இலிருந்து மீள்விக்கப்பட்டது