பக்கம்:கன்னித் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

கன்னித் தமிழ்


வரையறை இப்படித்தான் பேச வேண்டும் என்று ஒருவர் கட்டுப்படுத்தாமல், உணவு உண்ணவும் ஆடை உடுத்தவும் எப்படிப் பழக்கம் ஏற்படுகிறதோ அப்படித் தானே ஏற்படுகிறது. பழக்கத்தினுல் வரு வதுதான் என்றாலும் அந்தப் பழக்கத்தில் உள்ள ஒரு வகைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்பாடாகவே நாம்

நினைப்பதில்லை.

இடுப்பில் நம்முடைய நாட்டுக்குத் தக்கபடி ஆடை உடுத்துக்கொள்கிருேம். இந்த நாட்டுக்கு ஏற்றபடி குழம்பைச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடுகிருேம். இத்தகைய பழக்கங்கள் பிறவியோடு வரவில்லை. தாயோ தந்தையோ பிறரோ செய்வதைக் கண்டு தெரிந்து கொள்கிருேம். மொழியும் அப்படித் தான். ஊர் முழுவதும் பேசும் பேச்சுக்கிடையே வாழ் வதல்ை நம்மை அறியாமல் அது நமக்குப் பழக்க மாகிறது. குழந்தைப் பிராயத்திலே இயற்கையாக வரும் ஒலி மாறி அதற்கு ஒரு வரையறை ஏற்பட்டு நாமும் தமிழில் பேசுகிருேம்.

எந்த நாட்டுக் குழந்தைகளானுலும் அவை இயற் கையாகப் பேசும் மொழி ஒன்றுதான். அதற்கு அகராதி இல்லை. ஆலுைம் எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரி மழலை பேசுவதில்லை. ஆகையால் அவை ஒலிக்கும் ஒலியினிடையே ஒரு பொதுமையைக் கண்டு பிடித்து அதைக் குழந்தைப் பாஷையாக வைத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு குழந்தையும் தனக்கென்று உடம்பும் உயிரும் அமைந்தது போலத் தனக்கென்று ஒரு குரலாகிய மொழியையும் பெற்றுத்தான் பிறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/62&oldid=1285991" இலிருந்து மீள்விக்கப்பட்டது