பக்கம்:கன்னித் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னித் தமிழ்

மனிதராகப் பிறந்தவர் யாவரும் பேசுகின்றனர். அதாவது தம்முடைய உள்ளக் கருத்தை வேறு ஒரு வருக்கு வாயில்ை ஒலிக்கும் ஒலிக்கூட்டத்தில்ை புலப் படுத்துகின்றனர். அந்த ஒலிக்கூட்டத்துக்கு மொழி அல்லது பாஷையென்று பெயர். எல்லா மனிதர்களும் வாயினுல் ஒலி செய்கின்றனர். ஆனல் சிலர் வாயி லிருந்து வரும் ஒலி மொழி ஆவதில்லை. எல்லோரு டைய வாயிலிருந்தும் வரும் ஒலி எப்போதும் மொழி ஆவதில்லை.

நாம் வாயை அசைத்து நாக்கைப் புரட்டிப் பேசு கிருேம். அதைப் பார்த்து ஊமையும் தன் நாக்கைப் புரட்டி முழங்குகிருன். ஆல்ை பாவம்! அவன் செய்யும் ஒலி மொழி ஆகாது. அப்படியே சின்னஞ் சிறு குழந்தை இனிய மழலை பேசுகிறது. அன்பினால் அதைக் குழலினும் யாழினும் இனிதென்று கொள் கின்றாேமே ஒழிய, அகராதியைக் கொண்டு அந்த ஒலிக்குப் பொருள் தேட முடியாது. -

இந்த இரண்டு வகையான ஒலியும் மொழி ஆகாததற்குக் காரணம் என்ன? மக்கள் வாயொலி மூலமாகத் தங்கள் கருத்தைப் புலப்படுத்தும்போது ஒரு வரையறையோடு அதைச் செய்கிறார்கள். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/61&oldid=613317" இலிருந்து மீள்விக்கப்பட்டது