பக்கம்:கன்னித் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் உருவான Ptf 64 கதை

படை பதைக்கும் வெயில்; அந்த வெயிலில் ஒரு சோலைக்குள்ளே போகிருேம். நெடுந்துரத்தில் வரும் பொழுதே சோலையின் பசுமைக்காட்சி நம் கண்ணைக் குளிர்விக்கிறது. ‘தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு” என்பது பழமொழி அல்லவா? மெல்ல மெல்ல நடந்து சோலைக்குள்ளே நுழைகிருேம். நுழைவதற்கு முன் சோலை ஒரே பிழம்பாக, பச்சைப் பரப்பாகத் தோற்று கிறது. அதற்குள் நுழைந்த பிறகு சோலை பிழம்பாகத் தோற்றுவதுபோய் அந்தப் பிழம்பாகிய முழுத் தோற் றத்தைத் தந்த மரங்களைப் பார்க்கிருேம். மரங்கள் இல்லாமல் சோலை என்று தனியே ஒன்று இல்லை. நெடுந்துாரத்திலிருந்து பார்க்கையில் சோலை யென் o னும் முழுப் பொருள்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குள் நுழைந்துவிட்டால் அந்த முழுப் பொருளை ஆக்கும் மூலம் இன்னதென்று தெரிகிறது.

இப்போது சோலை என்ற பொது உருவத்தை விட்டு, மரங்கள் செடிகள் கொடிகள் என்ற அந்த உரு வத்தை உண்டாக்கும் பகுதிகளைக் காண்கிருேம். இதோ மாமரம், இதோ தென்ன மரம், இதோ பலா மரம் என்று பார்த்துப் பார்த்து இன்புறுகிருேம். பூமர மும் பழமரமும் நிழல் மரமும் தனித்தனி கண்ணிலே படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/69&oldid=1538616" இலிருந்து மீள்விக்கப்பட்டது