பக்கம்:கன்னித் தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

கன்னித் தமிழ்


வெயில் வேகம் மறந்து போயிற்று. மெல்ல ஒரு மரத்தடியிலே சென்று அமர்கிருேம். அதன் பரந்த நிழலிலே மேல் துண்டை விரித்துப் படுத்துக் கொள் கிருேம். இப்போது நமக்கு மாமரம் ஒன்றுதான் தெரிகிறது. மற்ற மரங்களைப் பார்ப்பதில்லை. மெல்ல மரத்தின் ஒரு கிளையில் கண்ணைத் திருப்புகிருேம். அந்தக் கிளையில் பல வளார்கள் இருக்கின்றன. ஒரு வளாரைப் பற்றுகிருேம். அதிலிருந்து சிறு கொம்புகள்; அந்தக் கொம்புகளில் ஒன்றின் நுனியில் அழகான பூங்கொத்து. அடுத்த கொம்புக்குத் தாவுகிருேம். அங்கே இப்போதுதான் பிஞ்சுவிட்ட மாவடுக் கொத்து. அடுத்த கொம்பில் முற்றின மாங்காய். அதோ வேறொரு கிளையில் வேறொரு வளாரில் ஒரு கொம்பின் நுனியில் மாம்பழம் தொங்குகிறது. அதைப் பார்த்த வுடன் நம் நாக்கில் நீர் சுரக்கிறது.

சாலையிலிருந்து சோலையைப் பார்த்தபோது அதைப்பற்றி இத்தனை விஷயங்கள் தெரிந்தனவா? இல்லை. அதற்குள்ளே புகுந்தபோது மரங்களும், செடி களும், கொடிகளும் தெரிந்தன. மரத்தில் உள்ள கிளைகளும் வளார்களும் கொம்புகளும் தெரிந்தன. பூவும் பிஞ்சும் காயும் கனியும் தெரிந்தன.

வாழ்க்கை யென்னும் பிரயாணத்தில் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் மொழியென்னும் பூஞ்சோலைக் குப் புறத்தேதான் நடமாடினர்கள். கருத்தைத் தெரி விக்கும் ஒலிக் கூட்டமாக அது அவர்களுக்குத் தோன் றியதே தவிர, அதில் உள்ள உறுப்புக்கள் இன்ன வென்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. நாளடை வில் மொழியாகிய சோலைக்குள்ளே அறிஞர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/70&oldid=1285994" இலிருந்து மீள்விக்கப்பட்டது