பக்கம்:கன்னித் தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் உருவான கதை 63

புகுந்து பார்த்தார்கள். அந்தக் காலத்துக்குள் சோலை யும் வரவர வளம் பெற்றது. மரம் முதலியவற்றைக் கண்டு, இந்தச் சோலையின் அழகுக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து, பிறரும் தெரிந்து கொள்ளும் படி வெளிப்படுத்தினுர்கள். அப்படி வெளியிட்டது தான் இலக்கணம்.

தமிழ்ப் பூஞ்சோலைக்குள்ளே நுழைந்தால் மரங் களும் அதற்கு உறுப்பாகிய கிளைகளும் இலை பூ, காய் கனியாகியவைகளும் தோற்றம் அளிக்கும்.

பேசும் மொழியில் ஒலியும் பொருளும் சேர்ந்து வருகின்றன. அந்த ஒலியையும் பொருளையும் தனித் தனியே காணும் நிலை முதலில் வந்தது. பிறகு ஒலியைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினர்கள். பொருளையும் ஆராய்ச்சி பண்ணினர்கள். சொற்கள் பல சேர்ந்து கருத்தை விளக்க உதவுகின்றன என்று தெரிந்து கொண்டார்கள். அந்தச் சொல்லும் எழுத் துக்கள் பல சேர்ந்த ஒன்று என்று தெரிந்து கொண் டார்கள். . . . . . . .” - ২

தமிழ்ப் பூஞ்சோலைக்கு உள்ளே புகுந்து ஆராய்ந்த அறிஞர்கள் எழுத்து, எழுத்துக்களாலான சொல், சொற் கோவைகளால் புலப்படும் பொருள் என்றவற்றைத் தெரிந்து கொண்டார்கள். இந்த மூன்று பகுதிகளையும் பற்றி விரிவான ஆராய்ச்சி நடந்துகொண்டே வந்தது; இன்னும் நடந்து வரு கிறது. .

தமிழானது இயல் இசை நாடகம் என்று மூன்று பிரிவாக அநுபவிக்கும் நிலையில் உள்ளது. இயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/71&oldid=613355" இலிருந்து மீள்விக்கப்பட்டது