பக்கம்:கன்னித் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

கன்னித் தமிழ்

தமிழின் இலக்கணமும் மூன்று பிரிவாக அமைந்தது. எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக் கணம் என்ற மூன்றாகப் பழங்காலத்தில் புலவர்கள் பிரித்தார்கள். அகத்திய முனிவர் தாம் இயற்றிய இலக்கணத்தில் இயற்றமிழ்ப் பகுதியில் இந்த மூன்றை யும் பற்றிச் சொல்லியிருந்தார். இயல் தமிழுக்குத் தனியே இலக்கணம் இயற்றிய தொல்காப்பியர் அகத் தியர் கூறிய இலக்கணங்களையும் தமிழ் நாட்டுப் பேச்சு வழக்கையும் அக்காலத்தில் வழங்கிய இலக் கியங்களையும் நன்றாக ஆராய்ந்து, எழுத்து முதலிய மூன்று பிரிவையும் விரிவாகத் தம் இலக்கணத்தில் அமைத்தார்.

- ★

அவர் தொல்காப்பியத்தைத் திடீரென்று ஒரு நாள் நினைத்துக்கொண்டு இயற்ற உட்காரவில்லை. தம்முடைய ஆசிரியராகிய அகத்தியர் இயற்றிய இலக் கணம் இருந்தாலும், பல செய்திகளுக்கு அதில் தெளிவு காணப்படவில்லை. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றையும் தனித்தனியே வரையறுத்து ஒன் றன் இலக்கணம் ஒன்றாேடு கலவாமல் அதில் சொல் லப்படவில்லை. இவற்றை நினைந்து, ‘ விரிவாக ஓர் இலக்கணம் இயற்ற வேண்டும்’ என்று தீர்மானம் செய்தார். -

தமிழுக்கு இலக்கணம் இயற்றப் புகுந்தால், அது எழுதுகிற மொழிக்காகவா? பேசுகிற மொழிக் காகவா?’ என்று இப்போது கேட்கிறவர்கள் இருக் திருர்கள். தமிழ் என்பது பேசுகிறதும் எழுதுகிற தும் ஆகிய இரண்டுந்தான். தினந்தோறும் பழகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/72&oldid=1285995" இலிருந்து மீள்விக்கப்பட்டது