பக்கம்:கன்னித் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் உருவான கதை 65

கிற பித்தளைப் பாத்திரங்களும், விசேஷ காலங்களில் பழகுகிற வெள்ளிப் பாத்திரங்களும் பாத்திரங்கள் என்ற வகையில் ஒரு சாதியே. ஆகையால் தமிழுக்கு இலக்கணம் செய்யும்போது பேச்சுத் தமிழை விட்டு விட்டால் அந்த இலக்கணம் பெரும்பான்மையோரின் சார்பைப் பெருது ; சிறுபான்மைக் கட்சியின் சட்ட மாகத்தான் இருக்கும்.

தொல்காப்பியர் எப்படி இலக்கணத்தை இயற்றி ஞர் என்பதை யாரும் கட்டுரையாக எழுதிவைக்க வில்லை. அதற்காக அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை அறிய அவர் டைரியும் எழுதவில்லை. ஆனல் பழைய கால வழக்கப்படி, தொல்காப்பியத்துக்கு ஒரு வர் மதிப்புரை எழுதியிருக்கிறார். மதிப்புரை என்று சொல்வதைவிட முகவுரை யென்று சொல்வது பொருததமாக இருக்கும். அந்த முகவுரையை எழுதி

ஞர் என்பவர். அவருடைய தோழர் ஆகையால் அவர் பட்ட சிரமங்களையும் செய்த ஆராய்ச்சியையும் அறிய முடியும் அல்லவா? ஒருவாறு பனம்பாரனர் தம்முடைய சிறப்புப் பாயிரத்தில் அந்தச் செய்திகளைக் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார்.

தொல்காப்பியர் தமிழ் நாட்டில் வழங்கும் மொழியை ஆராய்ந்தாராம். ஏதோ ஒரு மூலையில் மக்கள் பேசும் மொழியை மட்டும் ஆராய்ந்தால் போதாது. ரெயிலும் மோட்டாரும் ஆகாய விமான மும் மாகாண வேறுபாட்டை மறக்கச் செய்யும் இந்தக் காலத்திலே திருநெல்வேலியிலிருந்து வரும் நண்பர் நம்மைப் பாளையங்கோட்டையில் வைத்துப் பார்த்தத - 5 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/73&oldid=613361" இலிருந்து மீள்விக்கப்பட்டது